பிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்புக்கு முன் வாட்ஸ்அப்பில் உருக்கமான பதிவு

 
Amrita Pandey

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தா பாண்டே ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். போஜ்புரி படங்கள் தவிர, இந்தி படங்கள், வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். சில விளம்பரங்களிலும் நடித்துள்ள இவர், அண்மையில் வெளியான பிரதிஷோத் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இவர், 2022-ம் ஆண்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த சந்திரமணி ஜங்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு அனிமேஷன் பொறியாளர் ஆவார். திருமணத்திற்கு பின் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

Amrita Pandey

இந்நிலையில், இவர்கள் இருவரும் அம்ரிதா பாண்டேவின் மூத்த சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்தில் பங்கேற்பதற்காக பாகல்பூர் வந்துள்ளார். திருமணம் முடிந்ததும், சந்திரமணி ஜங்காட் மும்பைக்கு திரும்பிய நிலையில், அம்ரிதா பாண்டே அங்கேயே சில மாதங்களாக தங்கி உள்ளார். அவர், வேலை குறித்து கவலைப்பட்டதாகவும், இதனால் வருத்தமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் திடீரென்று சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமிர்தாவின் சகோதரி வீட்டிற்கு வந்து நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நடிகை அம்ரிதா பாண்டே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Amrita Pandey

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அம்ரிதா பாண்டே இறப்பதற்கு சற்று முன்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ல் இரண்டு படகுகளில் எனது வாழ்க்கை இருக்கிறது, என் படகை மூழ்கடித்து அவளுடைய பாதையை எளிதாக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அமிர்தா பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவரின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web