‘பாரத்’ இது தேவை இல்லாத அணி.. நடிகர் சித்தார்த் காட்டம்!

 
Siddharth

எந்த பெயரை யார் வைத்தால் என்ன; அது தேவையில்லாத ஆணி என்று நடிகர் சித்தார்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. 

தற்கொலையால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. தற்கொலையை தடுக்கும் வகையில் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Suicide

அந்த வகையில் 2003-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அதன்படி, ஆண்டு தோறும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் அதைத் தடுப்பதற்கும்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசும் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாரத்தான் ஓட்டம், வாக்காத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி வளாகத்தில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் “தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல” எனும் தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 3 கிலோ மீட்டர் வாக்கத்தான் நடைப்பயணத்தை திரைப்பட நடிகர் சித்தார்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Siddharth

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சித்தார்த் தெரிவித்ததாவது, “தற்கொலை தடுப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று. மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் தற்கொலை எண்ணங்கள் வருகின்றது. அதற்கான விழிப்புணர்வு பேரணிதான் இன்று நடைபெற்றது.” என தெரிவித்தார்.

தொடர்ந்து ’இந்தியா - பாரத்’ பெயர் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் சென்னையில் நாம் கூடி உள்ளோம். எந்த பெயரை யார் வைத்தார்கள் என்பது தேவை இல்லாத ஆணி” என காட்டமாக பதிலளித்தார்.

From around the web