‘பீஸ்ட்’ நடிகை அபர்ணா தாஸ் திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து.. வைரல் வீடியோ!
நடிகை அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்பொல் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
2018-ல் வெளியான ‘நியான் பிரகாஷன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அந்த படத்தை தொடர்ந்து, மனோகரம் படத்தில் நடித்த, இவர், பிரியன் ஒட்டத்திலானு, சீக்ரெட் ஹோம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்ததை தொடர்ந்து தெலுங்கில் ஆதிகேஷவா படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
இதையடுத்து, கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘டாடா’ படத்தில் ஹீரொயினாக நடித்திருந்தார். காதலி, மனைவி, அம்மா என ஒரே படத்தில் கன கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், படத்தில் நடித்த கவின், அபர்ணா தாஸ் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இந்த படத்தை தொடர்ந்து, பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திடீரென திருமணம் குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியானது. நடிகை அபர்ணா, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அபர்ணா தாஸ் நடித்த 2வது படமான மனோகரம் படத்தில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த தீபக் பரம்பொல்லை காதலித்த நிலையில், பெற்றோரிடம் காதலை சொல்லி இருவரும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய நிலையில், தற்போது அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் தனது திருமணத்தை நடத்திக் கொண்டார். அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சினிமா பிரபலங்கள் அதிக அளவில் பங்கேற்காமல் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.