ஆதிபுருஷ் படத்துக்கு தடை.. பிரதமர் மோடிக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம்

 
Adipurush

ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

நடிகர் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், வெளியானதில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அமைப்புகள், வசனங்கள், கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியுள்ள விதம் உள்ளிட்டவை ஹிந்து மதத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக வட மாநிலங்களில் படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

Adipurush

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை விதிக்குமாறு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைக்கிறது. இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் ராமரையும், அனுமாரையும் அவமதிக்கும் வகையில் உள்ளன. மேலும் இந்துக்களின் மத நம்பிக்கையையும், சனாதன தர்மத்தையும் இப்படம் காயப்படுத்துகிறது.

ஸ்ரீராமர் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் கடவுளாக இருப்பவர். அது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இப்படத்தில் ராமரையும், ராவணனையும் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தை போல காட்டியுள்ளனர். இப்படத்தின் வசனங்களும் உலகம் முழுக்க வாழும் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்துக்கு உடனடியாக தடை விதிக்கவும், எதிர்காலத்தில் இப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாத வகையில் தடுக்கவும் பிரதமர் நரேந்திரம் மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

Letter

மேலும், படத்தின் இயக்குநர் ஓம் ராவத், வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர், தயாரிப்பாளர்கள் ஆகியோரின் மீது இந்துமத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்திய சினிமாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மோசமான ஒரு படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

From around the web