ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா.. 5 ஆண்டு கால கனவு நனவாகிடுச்சி.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

 
KPY Bala

தனது 5 ஆண்டு கால கனவை நனவாக்கிய மகிழ்ச்சியில் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் குக் வித் கோமாளி பாலா தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் 6வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார். பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்ட பாலாவுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய பிரேக் கொடுத்தது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தார் பாலா. இதனைத் தொடர்ந்து, தும்பா, காக்டைல், ஜூங்கா, புலிப்பாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சில ஷோக்களை ஆங்கரிங் செய்து வருகிறார். 

KPY Bala

இவரை காமெடி செய்யும் நபராகவே பலருக்கு தெரியும். ஆனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு அறக்கட்டளையை வைத்து அதில் நிறைய பேருக்கு உதவி வருகிறார். இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒருவருக்கு ஆம்புலன்ஸ வாகனம் வழங்குகிறார்.

அவர் தனது இன்ஸ்டாவில் கூறுகையில் என்னுடைய 5 ஆண்டு கனவு தற்போது நனவாகிடுச்சி. எப்புடியாவது முதியோர் இல்லத்துல இருக்கிற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நெனச்சேன். ஆனால் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்த்து வெச்சி எப்புடியோ சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன்.

A post shared by Bj Bala (@bjbala_kpy)

பெரியவங்க ஆட்டோல செக்கப்புக்கு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். ஆம்புலன்ஸில் போகலாம். அது மட்டும் இல்லாம ஹோமுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் யாருக்கு அவசரம் என்றாலும் இந்த ஆம்புலன்ஸ் இலவசம். அதுக்கு பெட்ரோலையும் நான் இலவசமாகவே கொடுத்துடறேன். அனைவருக்கும் மிக்க நன்றி.

என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. உங்க எல்லாருடைய ஆதரவுலதான் என் கனவ சாதிக்க முடிஞ்சது லவ் யூ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறைந்த ஊதியம் பெற்றாலும் உதவ வேண்டும் என்ற மனசு இருக்கே அதுதான் சார் கடவுள் என பாலாவை பாராட்டி வருகிறார்கள்.

From around the web