இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் 'அயலான்' பட இயக்குநர்.. குவியும் வாழ்த்து..!
இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
2015-ம் ஆண்டு வெளியான ‘நேற்று இன்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். தன்னுடைய முதல் படத்தையே சயின்ஸ் பிக்சன் காமெடி திரைப்படமாக இயக்கி இருந்தார். இந்த படத்தில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருந்தார்.
அதன் பின்னர் 2017-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படமும் சயின்ஸ் பிக்சன் திரைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதாவது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஏலியன் பற்றிய கதைக்களத்துடன் இந்த படம் உருவான நிலையில், இப்படம் எடுத்து முடிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் ரவிக்குமாருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் ரவிக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் பிரியா கணேசன் கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் ரவிகுமார் மகிழ்ச்சியுடன் அறிவித்து, உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்’ என்று தெரிவித்துள்ளார்.