ஓடிடியில் வெளியான அவதார் 2... சம்மரில் குழந்தைகளுக்கு செம ட்ரீட்!!

 
Avatar

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் ‘அவதார்’. உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த சயின்ஸ்-பிக்சன் படமான அவதார் உலகின் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ 3டி தொழில்நுட்பத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியானது.

Avatar

உலக அளவில் சுமார் 160 மொழிகளில் வெளியான இந்தப் படம் இதுவரை ரூ. 18 ஆயிரம் கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை அவதார் 2 பிடித்திருக்கிறது. 

மேலும் இதுவரை அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தை அவதார் திரைப்படம் பிடித்திருக்கிறது. இருப்பினும் முதல் பாகத்தின் வசூலை இந்தப் படத்தால் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

Avatar

இந்த நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய ஓடிடி தளங்களில் இன்று முதல் வெளியாகி உள்ளது. கோடை விடுமுறை நெருங்குவதால் இந்த சம்மரில் குழந்தைகளுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web