ஒரே ஒரு வீடியோவால் தற்கொலைக்கு முயற்சி.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

 
Anuya

நடிகை அனுயா, தான் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-ல் வெளியான ‘மகேக்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் அனுயா. அதன்பின், 2009-ல் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. தற்போது வரை இந்த படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Anuya

கடந்த 2017-ம் ஆண்டு பின்னணி பாடகி சுசித்ராவின் எக்ஸ் வலைதள பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டனர். அதில் நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோவும் வெளியானது. இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை அனுயா, தான் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த பேட்டியில, “சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் என்னைப் பற்றி வெளியான அந்த மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன வேதனைக்கு ஆளானேன். அந்தப் பிரச்சினையை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை.

Anuya

அந்த சமயத்தில் எனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது. ஆனால், என்னுடைய அந்த எண்ணத்தை மாற்றியது என் குடும்பம்தான். அவர்கள் என்னுடன் அந்த சமயத்தில் இல்லை என்றால் நான் இந்நேரம் உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன். அந்த சமயத்தில் அவர்கள் என்னை புரிந்து கொண்டு துணையாக இருந்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

From around the web