குடும்பத்தினரால் தாக்குதல்.. சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

 
Vaishnavi Dhanraj

தனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக வைஷ்ணவி தன்ராஜ் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2008-ல் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பான ‘கசௌதி ஜிந்தகி கே’ தொடர் மூலம் இந்தியில் அறிமுகமானவர் நடிகை வைஷ்ணவி தன்ராஜ். அதை தொடர்ந்து சோனி சேனலில் ஒளிபரப்பான ‘சிஐடி’ தொடரில் இன்ஸ்பெக்டர் தாஷா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதுமட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Vaishnavi Dhanraj

அதை தவிர 2018-ம் ஆண்டு வெளியான ‘வோட்கா டைரிஸ்’ மற்றும் ‘பிகே லேலே ஏ சேல்ஸ்மேன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறி வைஷ்ணவி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “எனக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. நான் இப்போது மும்பை காஷ்மீரா காவல் நிலையத்தில் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளேன். எனக்கு ஊடகத்தினர், செய்தி நிறுவனங்கள் ஆகியோரின் உதவி தேவை” என்று கூறியுள்ளார்.


இந்த வீடியோவை வைஷ்ணவி தனது நண்பரான ஹிமான்ஷு ஷுக்லா என்பவருக்கு அனுப்பியுள்ளார். அதை அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் நிதின் ஷெராவத்தை திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி தன்ராஜ், குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web