காதல் மனைவிக்கு அட்லி  கொடுத்த ஸ்பெஷல் பரிசு.. அது என்னானு தெரியுமா?

 
Atlee - Priya

இயக்குநர் அட்லி தனது மனைவியின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷலாக பரிசு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘முகப்புத்தகம்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

Atlee - Priya

அதன் பிறகு நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். பின்பு பாலிவுட்டில் ஷாருக்கானின் 'ஜவான்' மூலமாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் அட்லி. பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தினார். வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமல்லாது, பல உண்மைச் சம்பவங்களையும் இதில் பொட்டில் அடித்தாற்போல அட்லி சொல்லி இருந்தது வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தன் காதல் மனைவி பிரியாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ‘கடவுள் எனக்குத் தந்த வரம் நீ. என் வாழ்வில் தேவதையாக வந்த நீ பல மாற்றங்களை செஞ்சுட்டு வர’ எனச் சொல்லி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைக் அட்லி கூறியுள்ளார்.


இதுமட்டுமல்லாது, பிரியாவை சர்ப்ரைஸாக ஜான்வி கபூருடன் மகா காலேஷ்வர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அதைத் தன் மனைவிக்குப் பிறந்தநாள் பரிசாகக் அட்லி கொடுத்துள்ளார். அவர்களுடன் நடிகை ஜான்வி கபூரும் தனது காதலனுடன் சென்று அக்கோவிலில் சாமி தரிசனம் செய்து அந்தப் புகைப்படங்களும் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web