67 வயதில் 10ம் வகுப்பு படிக்கும் பிரபல நடிகர்.. வெளியான தகவல்!

 
Indrans

பிரபல  மலையாள நடிகர் இந்திரன்ஸ், தனது 67வது வயதில், கேரள மாநில எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்புக்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்திட்டத்தில் இணைந்துள்ளார்.

1981-ல் வெளியான ‘சூத்தாட்டம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சுரேந்திரன் கொச்சுவேலு. இந்திரன்ஸ் என்ற அறியப்பட்ட இவர், 1994-ல் சிஐடி உன்னிகிருஷ்ணன் பி.ஏ., பி.எட்., என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் ஒரு திருப்புமுனையைப் பெற்றார். 1990கள் மற்றும் 2000களில் நகைச்சுவை வேடங்களில் இந்திரன்ஸ் பிரபலமானார்.

கேரள மாநில அரசின் எழுத்தறிவுத் திட்ட விளம்பர தூதுவராக இந்திரன்ஸ் செயல்பட உள்ள நிலையில் அவர் தனது கல்வித்திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அதே சமயம் இதற்கு முன்னர், இந்திரன் எதுவரை பயின்றுள்ளார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் கேரள மாநில எழுத்தறிவுத்திட்ட இயக்குநர் ஏ.ஜி.ஒலீனா கூறுகையில், ‘இந்திரன்ஸ் 8ம் வகுப்பில் பாதியில் பள்ளியிலிருந்து இடைநின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Indrans

எங்களது எழுத்தறிவுத்திட்ட பணியாளர்கள் இவர் பள்ளி அளவிலேயே பயின்றுள்ளதை கண்டறிந்து இந்த திட்டத்தில் கல்வி பயில இணைத்துள்ளனர். அவர் சேர்ந்துள்ளதன் மூலம் எழுத்தறிவு திட்டத்தில் மற்றவர்களும் இணைவதற்கு வழிவகுக்கும்’ என்றார்.

மலையாள இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடைய இந்திரன்ஸ் இதுகுறித்து கூறுகையில், ‘எனது கல்வியை முழுமையாக நிறைவு செய்ய இயலாமல் போனது குறித்து நான் அடிக்கடி கவலைப்பட்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து நின்றபோது நான் இழக்கும் விஷயத்தின் மகத்துவம் குறித்து உணரவில்லை. பின்னர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நான் உணர்ந்தேன்.

Indrans

குறிப்பாக நடிகரான பிறகு மற்றும் பயணங்களின்போது படிக்காததற்காக மிகவும் வருந்தியிருக்கிறேன். இதனால் நம்பிக்கை குறைவு ஏற்பட்டது. நான் மட்டும் படித்திருப்பேனேயானால், இப்போது இருப்பதை காட்டிலும் மிகவும் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருந்திருப்பேன்’ என்றார்.

From around the web