11 வயதில் பேருந்தில் ஒருவன் என் டீ ஷர்டுக்குள்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

 
Andrea

நடிகை ஆண்ட்ரியா தன் தந்தையுடன் 11 வயதில் பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

2005-ல் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதன் பின் 2006-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமாலினி முகர்ஜிக்கு பின்னணி குரல் கொடுத்தார், 2007-ம் ஆண்டு சரத்குமாருடன் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக ஆண்ட்ரியாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’, ‘துப்பறிவாளன்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வட சென்னை’, ‘மாஸ்டர்’, ‘அரண்மனை 3’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும் இன்னும் இப்படம் வெளியாகாமல் உள்ளது.

Andrea-jeremiah

நடிகையாக மட்டும் இன்றி ஒரு பாடகியாகவும், ஜொலித்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது எனக்கு 11 வயது இருக்கும். நான் என் பெற்றோருடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஜீன்ஸ்,டீ ஷர்ட் அணிந்திருந்தேன். என் அப்பா அருகில் அமர்ந்திருந்தார். அப்போது என் டீ-ஷர்டுக்குள் மர்ம நபர் ஒருவர் கை விடுவதை உணர்ந்தேன். பின்னர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அப்பா பக்கத்தில் பயத்துடன் அமர்ந்து கொண்டேன்.

Andrea-Jeremiah

இதை யாரிடமும் சொல்லாததற்கு என்ன காரணம் என அப்போது எனக்கு புரியவில்லை அழுகைதான் வந்தது என தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பின்னர், ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web