இட்லி கடை க்கு வில்லன் ஆனார் அருண் விஜய்!!
இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் இட்லிக்கடை. மதுரை, தேனி மாவட்டங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் விளம்பரத்திற்காக சுந்தராபுரம் செல்லும் பேருந்து படத்தை வெளியிட்டு இருந்தார். இந்தப் பெயர் பல்வேறு ஊகங்களையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அருண் விஜய் வில்லனாக நடித்து வரும் செய்தி வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜீத்திற்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். என்னை அறிந்தால் படத்தைப் போல் இட்லிக் கடை படத்திலும் அருண் விஜய்க்கு சவாலான வேடம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அருண் விஜய்க்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராயன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடித்து இயக்கி வரும் இட்லி கடை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது