50 வயசுல மறுமணமா..? ஓப்பனாக சொன்ன நடிகை சுகன்யா!

 
Suganya

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையான சுகன்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் மறுமணம் குறித்து பேசி உள்ளார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் நடிகை சுகன்யா பரதநாட்டிய கலைஞர் தான். இவர் நடிப்பை விடவும் தனக்கு பரதநாட்டியம் டான்ஸ் தான் ரொம்ப பிடித்தது என்று ஆரம்பத்தில் கூறியிருக்கிறார். நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்த சுகன்யா முதல் முதலாக ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கமலுடன் மகாநதி, இந்தியன். விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர், சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகா பிரபு என பல முன்னணி கதாநாயகர்களோடு அந்த நேரத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.

Suganya

நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நந்திதா தாஸ்க்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் இவரை புகழ வைத்து விட்டார்.

இந்த நிலையில், நடிகை சுகன்யாவுக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவருடன் திருமணம் ஆனது. சுகன்யாவின் கணவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் இவர்களது திருமணம் அமெரிக்காவில் தான் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் கணவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார் சுகன்யா. இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சுகன்யா.

Suganya

விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்ட சுகன்யா, அவ்வப்போது மட்டும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் திருமணம். சேரன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. விவாகரத்துக்கு பின்னர் 20 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை சுகன்யாவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. இந்நிலையில், நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு அண்மையில் நடிகை சுகன்யா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகன்யா, இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை. எனக்கு இப்போ 50 வயசு ஆகுது. இனி கல்யாணம், குழந்தைனு வந்தா, அந்த குழந்தை என்னை அம்மானு கூப்பிடுமா இல்ல பாட்டினு கூப்பிடுமானு நானே யோசிப்பேன். நான் மறுமணம் வேண்டும்னு சொல்லல, வேண்டாம்னும் சொல்லல என எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் மழுப்பலான பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் கணவருடன் நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைக்க ரொம்ப வருடங்கள் ஆனதாகவும் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.

From around the web