நாகூர் தர்காவிற்கு ஆட்டோவில் வந்த AR ரஹ்மான்.. வைரல் வீடியோ!

 
AR Rahman

நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் 467 ஆவது கந்தூரி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எளிமையான முறையில் ஆட்டோவில் வந்திறங்கியது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலகப் புகழ்பெற்ற தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முறை 467வது நாள் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் நாகை யாஹூசைன் பள்ளி தெருவாசலில் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கியது.

அன்று அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவுக்கு நேற்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில், “பாரதத்தின் உயரிய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. 467ஆவது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தர்காவின் குறிப்பேட்டில் எழுதினார்.

AR Rahman

இந்த நிலையில் இந்த கந்தூரி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார். அவர் தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு வந்திருந்தார். அங்கு அவர் சந்தன கூடு திருவிழாவிலும் கலந்து கொண்டார். இந்த முறையும் அவர் கூட்டநெரிசல் காரணமாக ஆட்டோவில் வருகை தந்தார்.

கடும் கூட்டத்தில் ஆட்டோவில் தர்கா நிர்வாகிகளுடன் அமர்ந்து வந்திருந்தார். சிவப்பு நிற ஜிப்பா, வெள்ளை பேண்ட் அணிந்துக் கொண்டு இரு கைகளையும் கட்டிக் கொண்டு மனமுறுக பிரார்த்தனை செய்தார். நாகூருக்கு ஆண்டுதோறும் ஏ.ஆர்.ரகுமான் வருகை தருவார். அது போல் கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் நடந்த கந்தூரி விழாவில் ரகுமான் கலந்து கொண்டிருந்தார்.


மேலும் பெரிய இடங்களில் இசைக் கச்சேரி நடத்தும் போது ஏ.ஆர்.ரகுமான் நாகூர் வந்து பெரியாண்டவரின் ஆசியை பெறுவது வழக்கம். எந்தவித பந்தாவும் இல்லாமல் சாமானியரை போல் வருகை தந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுவார். கடந்த முறை அவர் சந்தன கூடு விழாவுக்கு கூட்டநெரிசல் காரணமாக ஆட்டோவில் வந்திருந்தார். அவருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் வரவேற்புகளை செய்திருந்தனர்.

From around the web