மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

 
Anushka

ரொஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

2005-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் அனுஷ்கா ஷெட்டி. முதல் படத்தில் இருந்தே மக்களின் அமோக வரவேற்பை பெற்ற அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. தெலுங்கில் அனுஷ்காவுக்கான மவுசு மிகவும் அதிகமானது என்றே சொல்லலாம். இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் கால்கடுக்க காத்திருந்தனர். இப்படியான சூழ்நிலையில் தெலுங்கில் இருந்து தமிழ் சினிமா பக்கம் திரும்பினார், அனுஷ்கா.

சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கை போலவே தமிழும் வந்த வேகத்தால் மக்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.தொடர்ந்து விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், கார்த்தியுடன் சகுனி, சிம்புவுடன் வானம், விக்ரமுடன் தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதேபோல் ரஜினி முதல் சிம்பு வரை தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

Kathanar

இப்படியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அசைக்கமுடியாத ரசிகர்கள் கூட்டத்துடன் ஸ்டார் நடிகையாக வலம் வந்த அனுஷ்கா தற்போது மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாக்கவுள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் 75 கோடி ரூபாய் என கூறுகின்றனர்.

ரொஜின் தாமஸ் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர்கள் ஜெயசூரியா மற்றும் வினீத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படம், 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான கடமத்தது கத்தனார் என்பவரின் வாழ்க்கையை பற்றியது. மந்திர தந்திரங்கள் அறிந்த கத்தனாரின் வேடத்தில் ஜெயசூரியா நடிக்கிறார்.

Kathanar

இந்த படத்தில் கள்ளியன்காட்டு நீலி என்ற வேடமேற்று நடிகை அனுஷ்கா நடிக்கிறார். தெய்வீக அழகுடன் கூடிய, ரத்த தாகம் கொண்ட பேயாக அவர் மிரட்ட வருகிறார். திகில் காட்சி பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம், ஆண்டு இறுதியில் வெளிவர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web