நான் ஆபாச நடிகையா..? பொதுமக்கள் முன் நடிகை ரோஜா கண்ணீர் மல்க பேட்டி!

 
Roja

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் நான் ஆபாச நடிகையா? என ஆவேசமாக நடிகை ரோஜா கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரோஜா, 90-களில் இளைஞர்களின் இதையத்தை கொள்ளையடித்த முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ரஜினி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது மட்டுமின்றி, அவர் நடித்த உழைப்பாளி, அதிரடிப்படை, சூரியன், வீரா உள்பட பல படங்கள் வெற்றியை அள்ளி தந்தன.

கதாநாயகியாக நடித்த காலங்கள் மாற நடிகை ரோஜா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு இணைந்தார். அந்த கட்சியின் தெலுங்கு மகிளா அணி தலைவராக இருந்த நடிகை ரோஜா 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

அதன்பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா, பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, வெற்றி பெற்ற நடிகை ரோஜா எம்எல்ஏவானார். தற்போது அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக ரோஜா உள்ளார்.

Roja

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா என்பவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்றும் லாட்ஜ்களுக்கு சென்று உள்ளார் என்றும் ப்ளூ ஃபிலிம் நடித்து உள்ளார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்து ஆந்திர மாநில மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சமீபத்தில் கைது செய்தனர்.

இந்த நிலையில் திருப்பதியில் இது குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்த ரோஜா, அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாததால் என்னைப் பற்றி அவதூறாக பேசுகிறார்கள், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில் இந்த நாட்களில் கூட பெண்களை அடக்குவதில் தெலுங்கு தேசம் பற்றி குறியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியில் நான் 10 ஆண்டுகள் இருந்தேன். அப்போதெல்லாம் எனது கேரக்டர் சரியில்லை என்று புறக்கணிக்கவில்லை. ஆனால் நான் தற்போது கட்சி மாறி அமைச்சராக இருக்கும் நிலையில் என்னை பற்றி அவதூறாக பேசுகின்றனர். ஆபாச படத்தில் நான் நடித்தேன் என்று கூறுவதோடு சட்டமன்றத்தில் மார்பிங் செய்த சிடிக்களை காட்டுகிறார்கள். நான் ஆபாச படத்தில் நடித்த சிடி உங்களிடம் இருந்தால் பொதுமக்களிடம் வெளியிடுங்கள்.

ரெக்கார்ட் டான்ஸ் ஆடியதாகவும் லாட்ஜுக்கு போனதாகவும் ப்ளூ பிலிம் நடித்ததாகவும் முன்னாள் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் என்னைப் பற்றி அவதூறு கூறுகிறார்கள். உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளை இதே போன்ற குற்றச்சாட்டு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் மீதும் வரும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

From around the web