ஒரே நாளில் அக்கா அண்ணா மாரடைப்பால் மரணம்.. கதறி துடித்த பிரபல நடிகர்! முதல்வர இரங்கல்

 
Bose Venkat

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும், சகோதரரும் ஒரே நாளில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் மூலம் அறிமுகமானவர் போஸ் வெங்கட். 2003-ல் வெளியான ‘ஈர நிலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், அரசாட்சி, கண்ணம்மா, தலைநகரம், தீபாவளி, சிவாஜி, மருதமலை, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், 2020-ல் வெளியான ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கியுள்ளார்.

Bose Venkat

இந்த நிலையில் நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் நேற்று ஒரே நாளில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்து, அவரது இறுதி சடங்கிற்கு போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் அறந்தாங்கியில் இருந்து விரைந்து வந்து மறைந்த சகோதரியின் உடல்மீது சாய்ந்து கதறி அழுத நிலையில் அவருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

போஸ் வெங்கட்டின் மறைந்த சகோதரி யின் உடல் நேற்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சகோதரர் மறைந்த ரங்கநாதன் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

MKS-Bose

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி மற்றும் சகோதரர் இருவரின் திடீர் மறைவு செய்தி அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போஸ் வெங்கட் மற்றும் மறைந்த குடும்பதாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

From around the web