கால்பந்தில் கலக்கும் அஜித்தின் மகன்.. வைரலாகும் புகைப்படம்!

 
Ajith Son adhvik

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் சென்னையின் எஃப்.சி அகடாமியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர், சினிமாவை போல் பைக் ரைடிங்கிலும் அதீத ஆர்வம் செலுத்தி வருகிறார். பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்பது தான் அஜித்தின் நீண்ட நாள் ஆசை, தற்போது அவரின் அந்த ஆசை படிப்படியாக நிறைவேறி வருகிறது. கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், தன் உலக சுற்றுலாவின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடிவு செய்துள்ளார்.

adhvik

அந்த வகையில் இந்தியா, நேபால், பூட்டான் போன்ற நாடுகளில் இதுவரை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள அஜித், தனது அடுத்தக்கட்ட பைக் சுற்றுலாவை இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார். தற்போது அவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் தான் தன் உலக சுற்றுலாவை தொடர அஜித் திட்டமிட்டு இருக்கிறார்.

இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இதில் ஆத்விக் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தற்போது புகழ்பெற்ற சென்னையின் எஃப்.சி அணியின் யூத் டீமிற்காக களமிறங்கி விளையாடி உள்ளார்.

Ajith son

இந்நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக் சென்னையின் எஃப்.சி Grassroot Academy-ல் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆதிவிக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

From around the web