‘காட் ப்ளஸ் யு மாமே’.. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ 2வது லுக் போஸ்டர் வெளியீடு.!
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, அவர் நடிக்கும் 63-வது படமாக ‘குட் பேட் அக்லி’ படம் உருவாகிறது. இதனை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது. இது படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த லுக் உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இந்தப் படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரை பொறுத்தவரை அவரைச் சுற்றியிலும் துப்பாக்கிகள் அணிவகுத்து கிடக்கின்றன. பின்னணியில் ‘காட் ப்ளஸ் யு மாமே’ என எழுதப்பட்டுள்ளது.
Second look of #GoodBadUgly #GBU mamae God Bless u❤️🙏🏻 My sir #AK sir @MythriOfficial #Naveen sir, #Ravi sir , Dinesh sir @SureshChandraa sir ❤️🙏🏻 pic.twitter.com/JH2KQrD7qE
— Adhik Ravichandran (@Adhikravi) June 27, 2024
நாக்கை துருத்திக்கொண்டு, கையில் டாட்டுவுடன் நிற்கும் அஜித்தின் கலர்ஃபுல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜாலியான படமாக இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களும் உணர்த்துகின்றன. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என தெரிகிறது.