புது லுக்கில் மாஸ் காட்டும் அஜித்.. குட் பேட் அக்லி நியூ லுக்

‘குட் பேட் அக்லி’ படத்திற்காக உடல் எடையைக் குறைத்த அஜித்குமாரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்து வரும் இந்த படத்தில் சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார், பிரசன்னா இணைந்து நடித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், குட் பேட் அக்லி பட லுக்கில் தல டக்கராக கொடுத்த போஸ் புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இதில் அஜித்குமார் உடல் எடையை குறைத்து இருப்பது போன்று இருக்கிறது.
வேட்டையன் படம் ரிலீஸ் ஆனவுடனே அஜித்தின் விடாமுயற்சி படத்தை வெளியிடும் பணிகளை லைகா நிறுவனம் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு குட் பேட் அக்லி வருவது உறுதியான நிலையில், டிசம்பர் மாதம் விடாமுயற்சி வெளியாகுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அல்லது ஜனவரி 26ம் தேதி விடாமுயற்சி வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு ரசிகர்கள் பல்ஸை பிடித்துள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து தரமான சம்பவத்தை குட் பேட் அக்லி படத்தில் செய்து வருகிறார் என்றே தெரிகிறது. மார்க்கோ போலோ டீசர்ட் அணிந்துக் கொண்டு அஜித் கொடுத்துள்ள ஃபிரெஞ்ச் பியர்ட் மற்றும் டாட்டூக்கள் உடம்பில் குத்தியபடி இருக்கும் ஸ்டில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.