களத்தில் தீப்பறக்கும் பயிற்சி.. கார் பந்தய அணியை தொடங்கிய அஜித்!

 
Ajith

நடிகர் அஜித்குமார் ‘அஜித் கார் ரேஷிங்’ என்ற கார் பந்தய அணியை தொடங்கியுள்ளார்.

1992-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. 

அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார். 

Ajith

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வேலை பார்க்கின்றார் அஜித் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்பட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.


சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படியனான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னெவென்றால் 'அஜித் கார் ரேஷிங்'  என்ற கார் பந்தய அணியை  நடிகர் அஜித் தொடங்கியுள்ளார். 

இது குறித்த அறிவிப்பை நடிகர் அஜித்தின் மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரபூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் 'அஜித் குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்
 

From around the web