கோட் படத்தில் அஜித்குமார்..? வெங்கட் பிரபு சொன்ன சர்ப்ரைஸ்!

 
ajith-vp-vijay

கோட் படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு சூசகமாக தெரிவித்துள்ளார்.  

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து இருக்கிறார். விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Goat

இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன்களும், படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் மும்மரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே, விஜயகாந்த், த்ரிஷா எனப் பலரும் இருக்கும் தகவலே ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் நிலையில், மேலும் ஒரு சர்ப்ரைஸான செய்தியை வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் கேமியோ செய்கிறார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு பேசியதாவது, அஜித்துடன் படம் எடுத்துவிட்டு விஜய்யை சந்திப்பதும் விஜய்யுடன் படம் எடுத்துவிட்டு அஜித்தை சந்திப்பதும் என நான் எளிதாக செய்துவிட்டேன் என நிறையப்பேர் என்னை பாராட்டுவார்கள். அவரது ரசிகர்களும் என்னை திட்டவில்லை. 

GOAT

கோட் படத்தில் நடிகர் அஜித்தின் ஒரு மொமண்ட் (தருணம்) இருக்கிறது. ஆனால் அது குரலா அல்லது அவரது காட்சியா என நான் தற்போது கூறவில்லை. ஆனால், படத்தில் அவர் சம்பந்தப்பட்ட தருணம் இருக்கிறது என்பது மட்டும் உறுதி எனக் கூறினார். இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.  

From around the web