Race காரில் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்த அஜித்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

 
Ajith

நடிகர் அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1992-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. 

அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், வலிமை, கடைசியாக வெளியான துணிவு படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார்.

Ajith

தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அஃலி’ படத்திலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் அஜித்தின் பைக் பயணத்தால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று தாமதமான நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு படமாக்கப்படும் என்று தெரிகிறது. இடையில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனோடு அஜித் இணைந்துள்ள 'குட் பேட் அஃலி' படத்தின்  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையொட்டி சமீபத்தில் அஜித் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ள அதிரடி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் தனது ஆரம்ப காலங்களில் கார் ரேஸராக இருந்தார்.

திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றாலும் அவ்வப்போது ரேஸிங்கில் ஈடுபட்டு தனது ஆர்வத்துக்கு தீனி பிட்டுகொள்வது வழக்கம். படங்களில் இடம்பெறும் அஜித்தின் ரேஸிங் சாகச காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளையும் அஜித் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web