சாலையில் ராஜநடை போட்டு வரும் அஜித்.. அட்டகாசமாக வெளியான ‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக்!

 
Vidaamuyarchi

அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

VidaaMuyarchi

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மங்காத்தா கிளைமேக்ஸில் அஜித் குமார் மற்றும் அர்ஜுன் இருவரும் பணம் நிறைந்த பேக்கை தூக்கிக் கொண்டு கெத்தாக நடந்து வருவது போல இந்த படத்தில் அஜர்பைஜான் சாலையில் அஜித் குமார் மட்டும் பண பேக்கை தூக்கிக் கொண்டு நடந்து வருவது போல போஸ் கொடுத்துள்ளார்.


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களை இந்த போஸ்டர் எந்த அளவிற்கு திருப்திபடுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.