ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் ஸ்பெஷல் கிப்ட்.. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை ஷாலினி நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு நடிகர் அஜித்குமார் காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஷாலினி, 1997-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமர்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமர்களம் படத்தில் நடித்த போது அஜித் ஷாலினியை காதலிக்க துவங்கினார்.
ஆரம்பத்தில் ஷாலினி இவரின் காதலை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினாலும் பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கிய சில வருடத்திலேயே பெற்றோர் சம்மதத்துடன், திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக, அஜித் - ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இன்றளவும் அதே காதலோடு தான் இருக்கின்றனர். இதனிடையே நடிகை ஷாலினி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
அதன்படி ஷாலினி தன்னுடைய பிறந்தநாளை தனது தங்கை ஷாமிலி, தம்பி ரிச்சர்டு, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் கொண்டாடி உள்ளார். நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் அவரால் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் தன் மனைவிக்கு சர்ப்ரைஸாக ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார் அஜித். அது வேறெதுவுமில்லை தனக்கு பிடித்த லெக்சஸ் காரை மனைவி ஷாலினிக்கு பரிசாக கொடுத்துள்ளார் அஜித்.
கணவர் கொடுத்த காஸ்ட்லி கிஃப்டை தொடர்ந்து ஷாலினியின் பிறந்தநாளுக்கு அவரது மகன், மகள், தங்கை, தம்பி ஆகியோர் சேர்ந்து கேக் வெட்டி உள்ளனர். அதுவும் ஒன்றல்ல ஆளுக்கு தலா ஒரு கேக் வீதம் மொத்தம் நான்கு விதமான கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் ஷாலினி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.