ஸ்ரீகாந்த் ஐ தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வும் சிக்குகிறார்!! வீட்டில் போலீசார் சோதனை!!

 
Krishna

கோகைன் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. நடிகர்களுக்கும் புதுமுகங்களுக்கும் பார்ட்டி கொடுப்பதும் அதில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பெசன் ட்நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணா பயன்படுத்திய மருந்துகள் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணாவின் சமூகத்தள கணக்குகளும் ஆராயப்பட்டு வருகிறது.

போதை விவகாரம் தமிழ்நாடு திரைப்படத்துறையில் பல திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும், சீனியர்களும் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

From around the web