ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து நடிகை நமீதாவிற்கு விவாகரத்து..? அவரே கொடுத்த விளக்கம்!

 
Namitha

ஜி.வி.பிரகாஷ் குமார் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நடிகை நமீதாவும் தன் காதல் கணவரை பிரிய உள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, 2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.

Namitha

பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கெடுத்து வந்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர செளத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது அரசியலில் பிசியாக உள்ள நமீதா, பாஜக கட்சியில் பணியாற்றி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனிடையே நடிகை நமீதாவுக்கும் அவரது கணவர் வீரேந்திர செளத்ரிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக செய்திகள் உலா வந்தன. அண்மையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து செய்தி வெளியாகி கோலிவுட்டில் புயலை கிளப்பிய நிலையில், நமீதாவின் விவாகரத்து செய்தியும் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியது. இதுகுறித்து மெளனம் காத்து வந்த நமீதா தற்போது அதுகுறித்த உண்மையை போட்டுடைத்துள்ளார்.

Namitha

அதன்படி, எங்களைப் பற்றிய விவாகரத்து வதந்தி வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். ஆனாலும் நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. எதன் அடிப்படையில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று புரியவில்லை. நடிகையான பின்னர் நிறைய வதந்திகளை பார்த்துவிட்டதால், நானும் என் கணவரும் இந்த விவாகரத்து வதந்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை என கூறியிருக்கிறார்.

From around the web