கூலி, ஜெயிலர் 2 படங்களுக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா?

70 வயதைக் கடந்த பின்னரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நீடித்து வரும் வசூல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
ஜெயிலர் 2 படத்தை முடித்து விட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். நானி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சரிப்போதா சனிவாரம் தெலுங்குப் படத்தை இயக்கியவர் தான் விவேக் ஆத்ரேயா. இவர் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டாராம்.
தெலுங்கு இயக்குனர்களின் நடிப்பில் தமிழ் ஹீரோக்கள் நடிக்கும் ஆர்வம் சமீபகாலத்தில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.