14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஈரம் பட கூட்டணி.. வெளியானது ‘சப்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
2009-ல் வெளியான ‘ஈரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் இயக்குநர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் மூலம் இயக்குநர் அறிவழகனின் முதல் படமான ஈரம் படத்துக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் பேய் தண்ணீரின் வழி வரும். அதுபோல், சப்தம் திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக 2 கோடி ரூபாய் செலவில்,120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரம்மாண்டமாக செட் உருவாக்கி படம் பிடித்துள்ளனர். குறிப்பாக சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி இசைக்காக தமன் மற்றும் படக்குழுவினர் ஹங்கேரி செல்ல உள்ளனர்.
இந்தப் படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மகாமுனி படம் மூலம் கவனம் பெற்ற அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, இதே இயக்குநருடன் ‘வல்லினம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற ‘சாபு ஜோசப்’ படத்தொகுப்பு செய்துள்ளார்.
Happy to share #Sabdham🔊first look.#SabdhamFirstLook
— VijaySethupathi (@VijaySethuOffl) December 14, 2023
Produced by@7GFilmsSiva @AadhiOfficial @dirarivazhagan @MusicThaman @aalpha_frames @SimranbaggaOffc @Lailalaughs #LakshmiMenon @KingsleyReddin @Aalpha_frames @Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2… pic.twitter.com/vMOxSpGIQb
இந்த நிலையில் சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.