கேன்சர் நோய் பாதிப்பு.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப்.. ரசிகர்கள் பாராட்டு!!

 
Sudeep

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் ஆசையை நடிகர் கிச்சா சுதீப் நிறைவேற்றியுள்ளார்.

1997-ல் வெளியான ‘தாயவ்வா’ படத்தின் மூலம் கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கிச்சா சுதீப். இவர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இதுதவிர இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.

Sudeep

2013-ம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகர்களில் ஒருவராவார். நான்கு  தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு கர்நாடக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இப்படி சினிமாவில் மட்டுமல்லாது ரியல் லைஃபிலும் ஹீரோவாக இருந்து பல்வேறு உதவிகளை செய்யும் நல் உள்ளம் கொண்ட மனிதராகவும் சுதீப் விளங்கி வருகிறார்.

இந்த நிலையில், 3-ம் வகுப்பு படிக்கும், 9 வயது நிரம்பிய சாக்‌ஷி என்ற சிறுமி, மெட்டாஸ்டேடிக் அல்லாத ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


அவர் நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகை. அவர் சுதீப்பை நேரில் சந்திக்க வேண்டும் என்பது தனது கனவு என கூறியிருந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த நடிகர் சுதீப், அந்தக் குழந்தையை நேரில் சந்தித்து உரையாடி, அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். தனது கனவு நாயகன் சுதீப் அவர்களை நேரில் சந்தித்ததில் குழந்தை சாக்‌ஷி மிகவும் உற்சாகம் அடைந்தார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

From around the web