ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் எக்ஸ் கணக்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Nayanthara

தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் தேவையில்லாத பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்குமாறும் நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

Nayanthara - Vignesh Sivan

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நயன்தாரா ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது. தற்போது, மலையாளத்தில் நிவின் பாலிவுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தவிர்த்து தனது காஸ்மெடிக் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர்த்து தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பாக படங்களையும் தயாரித்து வருகிறார். 



இந்நிலையில் நடிகை நயன்தாராவின் எக்ஸ் கணக்கு கிரிப்டோ விஷமிகளால் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் கணக்குகிரிப்டோ தொடர்பான இரண்டு பதிவுகள் நயன்தாராவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டன. பின்னர் அப்பதிவுகள் நீக்கப்பட்டன. தற்போது நயன்தாராவின் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து நயன்தாரா, “எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. எதாவது புதியதாக பதிவுகள் தென்பட்டிருந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டாம்” என கூறியுள்ளார்.

From around the web