காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் நடிகை தமன்னா.. வைரல் புகைப்படங்கள்!

 
Tamannaah

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தம்மனா வருகை புரிந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 2006-ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா அறிமுகமானார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது. அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.

Tamannaah

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னா கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெறுகத் தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் அங்கும் இங்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய தமன்னா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.

இந்நிலையில், நடிகை தமன்னா ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், குஜராத்தின் வாரணாசி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.  இதுகுறித்த படங்களை அவர் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

Tamannaah

அதில், பூக்கள் மலர்ந்திருப்பது போன்ற வடிவங்கள் கொண்ட பச்சை வண்ணத்திலான ஆடையில், கழுத்தில் பூமாலை அணிந்து பக்தி பரவசத்துடன் காணப்படுகிறார்.  அந்த பதிவில், ஹரஹர மகாதேவ் என்றும் தலைப்பிட்டு உள்ளார்.  சிவலிங்கத்திற்கு முன்னால் பிரார்த்தனை செய்யும் மற்றொரு புகைப்படமும் பகிரப்பட்டு உள்ளது.

சமீபத்தில், தனது குடும்பத்தினருடன் கவுகாத்தி நகரில் உள்ள காமக்யா கோவிலில் தமன்னா சாமி தரிசனம் மேற்கொண்டார்.

From around the web