சிவனை பார்த்து மனமுருகி ஆரத்தி காட்டிய நடிகை தமன்னா.. வைரல் வீடியோ!

 
Tamannaah

சிவனை பார்த்து மனமுருகி ஆரத்தி காட்டிய நடிகை தமன்னா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 2006-ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா அறிமுகமானார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது. அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.

Tamannaah

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னா கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெறுகத் தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் அங்கும் இங்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய தமன்னா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலத்துடன் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஈஷா யோகா மையத்தில் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்துகொண்டு மகா சிவராத்திரிக்கு சிவனை வழிபட்டு செல்வார்கள்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு ஏகப்பட்ட நடிகைகள் படையெடுத்துள்ளனர். அந்த வகையில், தற்போது இந்த விழாவில் நடிகை தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது இவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தமன்னா ஆண்டுதோறும் இந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு நடனமாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web