நடிகை ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம்? அவரே வெளியிட்ட பதிவு!
நடிகை ஸ்ருதிஹாசன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
1992-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தொடர்ந்து சாச்சி 420, ஹே ராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 2000-ம் ஆண்டில் வெளியான ‘ஹே ராம்’ படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து, ஏழாம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவற்றில் நடித்து காெண்டிருந்த போதே சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வரும் நிலையில், தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை மீது அதிக ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசன், சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் செட்டிலாகி விட்டார். இவர், சாந்தனு ஹசாரிக்கா என்பவரை பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார். ஸ்ருதி, சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது மட்டுமன்றி, இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி தனது காதலர் சாந்தனுவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில், பாலிவுட்டின் பிரபலங்களின் நட்பு வட்டாரங்களில் ஒருவராக இருக்கும் ஓர்ஹான் என்பவர் ஸ்ருதிஹாசன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ருதிஹாசன் ஓரமுறை போட்டோ எடுக்கும் போது தன்னிடம் கோபமாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அவரது கணவர் சாந்தனுவுடன் தான் நல்ல நட்பு கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஸ்ருதிஹாசன் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது.
— shruti haasan (@shrutihaasan) December 26, 2023
ஸ்ருதிஹாசனின் ரகசிய திருமணம் குறித்து தகவல்கள் பரவியதையடுத்து, அவரே அதற்கு விளக்கமளித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக இருக்கும் போது, இதை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்? என்ன பற்றி தெரியாதவர்கள் தயவு செய்து அமைதியாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.