பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகை சமந்தா.. செல்ஃபி எடுத்து கொண்ட பொதுமக்கள்!!

 
Samantha

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார்.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, நடித்து வந்த ‘குஷி’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் குணமடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்தார் சமந்தா.

Samantha

இதையடுத்து நடிகை சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் தயாராகி வருகிறது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இதையடுத்து நடிகை சமந்தா தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பிரபல நடிகை சமந்தா நேற்று மாலை 3 மணி அளவில் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அவருடன் உதவியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் சமந்தாவுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோவிலுக்குள் சென்ற சமந்தா பண்ணாரி அம்மனை பார்த்து மனமுருக வேண்டினார். தொடர்ந்து அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்து பக்தர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றார்.

Samantha

அப்போது கோவில் பணியாளர்கள் சமந்தாவை சூழ்ந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்து மகிழந்தனர். அதற்குள் சமந்தா கோவிலுக்கு வந்து தகவல் பரவியதால் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அதனால் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் அனைவரையும் பார்த்து கை அசைத்தபடி காரில் ஏறி சென்றார்.

From around the web