வருங்கால கணவருடன் வீடியோ வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் வருங்கால கணவருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2015-ம் ஆண்டு டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் 2016-ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது. இப்படம் பல விருதுகளையும் பெற்றது.
அடுத்ததாக சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆன் தேவதை படத்தில் நடித்தார். பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார்.
பிக் பாஸ் போட்டியில் இறுதிவரை தாக்குப்பிடித்து ரம்யா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் சினிமா பட வாய்ப்புகள் என அடுத்தடுத்து ரம்யா பாண்டியனுக்கு சான்ஸ் கிடைத்து இன்று செம்ம பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது.
இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இவருக்கும் யோகா மாஸ்டர் லவ்ல் தவானுக்கும் அடுத்த மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகை ரம்யா பாண்டியன் வருங்கால கணவருடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.