திரையுலகில் நடிகை ராதிகா 45 ஆண்டுகள் இடைவிடாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!!

 
Radhika

நடிகை ராதிகா திரையுலகிற்கு வந்து 45 வருடங்கள் நிறைவு செய்ததை ஒட்டி, திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1978-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது.

Radhika

இவர் தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார்.

இந்த நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள நடிகர் சரத்குமார், ‘இந்த பயணத்தைச் சுற்றி நிறைய கடுமையான உழைப்பு இருக்கிறது. வாழ்த்துகள்! இதற்கு நீ தகுதியானவள் தான். உன் பயணத்தில் நானும் இருப்பதில் பெருமையே’ எனக் கூறியுள்ளார்.

From around the web