நடிகை ரச்சிதாவுக்கு இரண்டாவது திருமணம்.. இயக்குநருடன் காதலா?

 
Rachitha

நடிகை ரச்சிதா மகாலட்சுமி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், மாப்பிள்ளை குறித்த தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, கன்னட சீரியல் மூலம் கெரியரை துவங்கினார். பின்னர் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கும், தினேஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் தினேஷ் மீது ரச்சிதா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினேஷோ மீண்டும் ரச்சிதாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் தினேஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் ரச்சிதா.

Rachitha

இந்நிலையில் ரச்சிதாவுக்கும், கன்னட இயக்குநர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தினேஷுடன் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டு அந்த இயக்குநரை திருமணம் செய்து கொள்ள ரச்சிதா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவலை ரச்சிதா உறுதி செய்யும் வரை நம்ப முடியாது. ஏனென்றால் ரச்சிதாவுக்கும், இயக்குநர் ஒருவருக்கும் திருமணம் என தகவல் வெளியாகியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

முன்னதாக கடந்த ஆண்டும் இதே பேச்சு கிளம்பியது. அதை ரச்சிதா மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே பேச்சு கிளம்பியுள்ளது. முன்னதாக பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரச்சிதா மகாலட்சுமி. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் தினேஷ் பற்றி பேசவில்லை. இதையடுத்தே தினேஷுக்கும், ரச்சிதாவுக்கும் பிரச்சனை என ரசிகர்கள் பேசத் துவங்கினார்கள்.

Rachitha

இதற்கிடையே ரச்சிதாவிடம் நெருங்கப் பார்த்தார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். அது தினேஷுக்கு பிடிக்காமல் போனது. அதை பார்த்தவர்களோ பொண்டாட்டி மீது பாசம் இருக்கத் தான் செய்கிறது என்றார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு தினேஷ் மீது போலீசில் புகார் அளித்தார் ரச்சிதா. பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பேட்டிகள் அளித்து வருகிறார் தினேஷ். இந்த தகவல் ரச்சித்தா மற்றும் தினேஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

From around the web