உயிருடன்தான் இருக்கிறார் நடிகை பூனம் பாண்டே? இறந்ததாக நாடகமாடிய பிரபல நடிகை!

 
Poonam Pandey

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், விளம்பரத்திற்காக இறந்ததாக நாடகம் நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானவர் பூனம் பாண்டே. மாடலாகவும் நடிகையாகவும் பாலிவுட் திரையுலகில் வலம் வந்த பூனம், திரைப்படங்களைத் தாண்டி கங்கனா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான ‘லாக் அப்’ மூலம் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் தைரியமாக பதிவுகளை வெளியிடும் பூனம், பல தொண்டு பணிகளையும் செய்துள்ளார்.

இதற்கிடையே, 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சைக்குள் சிக்கினார். அதன்பின் கடந்த 2020-ல் சாம் பாம்பே எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்தார் பூனம். அவருடன் கோவாவுக்கு ஹனிமூன் போகும் போதே கணவர் தன்னை டார்ச்சர் செய்ததாக போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர்.

சமூக வலைத்தளங்களிலும் அதிக ரசிகர்களை கொண்ட இவர், கடந்த சில காலமாக கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று இவர் உயிரிழந்ததாக செய்தியும் வெளியானது.செய்தியை உறுதி செய்யும் வகையில் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரது இறப்பு குறித்த பதிவு வெளியானது. 

Poonam-Pandey

இந்நிலையில், பூனம் பாண்டே உயிரிழந்தது உண்மை இல்லை.. அவர் உயிருடன்தான் இருக்கிறார்.. இந்த இறப்பு, வெறும் நாடகம்தான்.. பப்ளிசிட்டிக்காகவே இப்படியான ஒரு விஷயம் செய்யப்பட்டிருக்கிறது.. எனும் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமாக பகிரப்பட பூனம் பாண்டே எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

பூனம் பாண்டே இறக்கவில்லை அவர் உயிருடன்தான் இருக்கிறார் எனும் வகையிலான கருத்துக்களும் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டவர்கள் திடீரென இறப்பதில்லை.. உண்மையாகவே இறந்திருந்தால் அது பற்றி விசாரிக்க வேண்டும் எனும் வகையிலான பதிவுகளும் இணையத்தில் பதிவாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இறந்ததாக செய்தி வெளியான இரண்டு தினங்களுக்கு முன்பு, மிகவும் தெம்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை, திடீரென எப்படி இறக்கமுடியும்? ஒருவேளை, இறந்திருந்தால் அவரது உடல் எங்கே? எந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்? அவரது குடும்பத்த்தினர் எங்கே? அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது? போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.. அதனால் இது வதந்திதான்.. இது பப்ளிஸிடிக்காகவே செய்யப்படுகிறது எனவும் கூறுகிறார்கள் என்று நெட்டிசன்கள்.


இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது பட்ஜெட் உரையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பேசி இருந்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்யை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இப்படி பட்ஜெட்டில் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து பேசிய அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்ததாக சொல்லப்பட்டது கண்டிப்பாக நாடகம்தான்.. ஏதோ பப்ளிசிட்டிக்காக மட்டுமே செய்யப்பட்டது என்ற கருத்துக்களும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இப்படியான கருத்துக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலோ உறுதியான தகவலோ கிடைக்கப் பெறவில்லை. உண்மையில் பூனம் பாண்டே இறந்துவிட்டாரா? அல்லது நெட்டிசன்கள் கூறுவது போல இது வெறும் நாடகம்தானா ?

From around the web