சோஷியல் மீடியாவை விட்டு நடிகை நஸ்ரியா திடீர் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி!!
நடிகை நஸ்ரியா திடீரென்று அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013-ம் ஆண்டு வெளியான ‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா நசீம். அதனைத் தொடர்ந்து, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.
திருமணத்திற்குப் பிறகு 2018-ல் ‘கூட’ திரைப்படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து ‘டிரான்ஸ்‘, ‘மணியரயிலே அசோகன்’ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்தார். அதேபோல ‘அந்தே சுந்தராகிணி‘ திரைப்படம் முலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக இயங்கிவரும் இவர் தற்போது திடீரென அனைத்து சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் உங்கள் அன்பு மற்றும் செய்திகளை அனைத்தையும் இழக்கிறேன். எனக் கூறியுள்ள நடிகை நஸ்ரியாவின் முடிவு அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக விலகலுக்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.