பிரபல நடிகை மீரா வாசுதேவனுக்கு 3வது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து

 
Meera vasudevan

பிரபல நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2003-ல் வெளியான ‘கோல்பால்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். அதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Meera vasudevan

இதனிடையே கடந்த 2005-ம் ஆண்டு விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா வாசுதேவன், 2010-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2012-ம் ஆண்டு நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2016-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக விபின் என்பவரை மீரா வாசுதேவன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

A post shared by Meera Vasudevan (@officialmeeravasudevan)

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த மே 21-ம் தேதி தங்களது திருமணம் நடைபெற்றதாகவும், குடும்பத்தார், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் எனது கணவர் விபின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். திரைப்பட ஒளிப்பதிவாளர். கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவருடன் இணைந்து பணியாற்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதன் காரணமாக தற்போது திருமணம் செய்துள்ளோம். அனைவரும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். நடிகை மீரா வாசுதேவன் 3வது திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

From around the web