இரண்டாவது திருமணம் செய்த நடிகை காஜல்.. இன்ஸ்டாகிராமில் குதர்க்கமான பதிவு!

 
Kajal

தனக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது என்று புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடிகை காஜல் தெரிவித்துள்ளார்.

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை காஜல் பசுபதி. பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து வந்த அவர், 2004-ல் கமல் நடிப்பில் வெளியான ‘வசூல் ராஜா எம்எம்பிஎஸ்’ படத்தின் மூலம் பெரியத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இதயத்திருடன், டிஸ்யூம், சுப்புரமணியபுரம், சிங்கம் , கோ போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பின் அவரை விவாகரத்து செய்தார். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் சீசன் சென்றது போலவே, இவரும் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று, சிறிது நாள் அங்கு தாக்குப்பிடித்தார். கறார் பேச்சு மூலம் அறியப்படும் இவர், துணிந்து பல கருத்துக்களை முன்வைக்க கூடியவர். அடிக்கடி பரபரப்பான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, துணிந்து அதை எதிர்கொள்பவர்.

இந்த நிலையில் தற்போது காஜல் மணக்கோலத்தில் யாரோ ஒருவர் அவருக்கு தாலிகட்டுவது போன்ற பழைய புகைப்படம் ஒன்றில் அவரை மட்டும் கட் செய்து பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அந்த பதிவுக்கு கேப்ஷனாக “இனி என்னை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறன். திடீரென முடிவு எடுத்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே” என குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

A post shared by KAAJAL PASUPATHI OFFICIAL⚛️ (@kaajal_pasupathi)

இதைப் பார்த்து குழம்பி போன ரசிகர்கள் “இந்த போட்டோவை பார்த்தால் பழைய புகைப்படம் மாதிரி இருக்கே. இது நம்புவது போலவே இல்லையே. பொய் தானே சொல்றீங்க?” என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். “அப்படி  உங்களுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்றால் உங்கள் கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள்“ என்றும் “இது ஏதோ சினிமா ஷூட்டிங் போல தெரிகிறது” எனவும் கேள்விக்கணைகளை அவரது ரசிகர்கள் தொடுத்து வருகிறார்கள்.

From around the web