திருப்பதி மலையேறி வந்து சாமி தரிசனம் செய்த நடிகை தீபிகா படுகோனே.. வைரல் வீடியோ!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடந்தே மலையேறி திருமலை சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோன். அதனைத் தொடர்ந்து 2007-ல் ஃபாரா கான் இயக்கத்தில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானார்.
தற்போது பிரபல டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் ‘பைட்டர்’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற படக்குழுவினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரபல நடிகை தீபிகா படுகோன் நேற்று திருப்பதி வந்தார். அலிபிரி மலைப்பாதையில் உள்ள நடைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். பக்தர்களுடன் பாத யாத்திரையாக இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகா படுகோனுடன் செல்பி எடுத்து கொண்டனர். திருமலை சென்று அடைந்ததும் அங்குள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தீபிகா தங்கினார்.
Actress Deepika Padukone Visits Tirumala Tirupati Temple#DeepikaPadukone #Tirumala #BRKNEWS pic.twitter.com/1qx9SxUtOB
— BRKNews (@BRKTelugu_1) December 15, 2023
அங்கிருந்து இன்று காலையில் புறப்பட்ட அவர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். நடிகை தீபிகாவை தேவஸ்தான அதிகாரிகள் கோவிலுக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.