நடிகை அசின் விவாகரத்து? இன்ஸ்டாவில் புகைப்படங்களை அதிரடியாக நீக்கினார்!!

 
Asin

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த அசின், அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

2001-ல் வெளியான ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். அதன்பின், 2004-ல் வெளியான ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, உள்ளம் கேட்குமே, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது அமீர்கான் ஜோடியாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் அவருக்கு இந்தி படங்கள் குவிந்தன. சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இதன்பின் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் பாலிவுட் பக்கம் ஒதுங்கிய அவர் அங்கு சல்மான் கான், ஆமீர்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பான் இந்தியா நடிகை ஆனார்.

Asin

ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது. புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என பெயரிட்டுள்ளனர்.

அசின் - ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

Asin

தற்போது அசின் தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அசின் - ராகுல் சர்மா ஜோடியின் விவாகரத்து மேட்டரை உறுதி படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் நடிகை அசின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். இதை வைத்தே அவர் கனவருடன் விவாகரத்து என பேசப்படுகிரது. இதற்கு அசின் - ராகுல் சர்மா தரப்பில் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

From around the web