ஆண் குழந்தைக்கு அம்மாவானர் நடிகை அமலாபால்.. ரசிகர்கள் வாழ்த்து!

 
Amala Paul

நடிகை அமலாபால் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amala Paul

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.  திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தாங்கள் பெற்றோர் ஆன விஷயத்தை அறிவித்தது இந்த ஜோடி. கடந்த வாரத்தில் நடிகை அமலாபால் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

A post shared by Jagat Desai (@j_desaii)

இப்போது கடந்த 11-ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறார்கள். குழந்தைக்கு இலை எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவரான அமலாபால் காடுகள், மலைகளில் பயணம் செய்வதில் பிரியம் கொண்டவர். அதனால், இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும் என தங்கள் மகனுக்கும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளது இந்த ஜோடி. குழந்தைக்கு தங்கள் வாழ்த்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web