அரிய வியாதியால் அவதிப்படும் நடிகை அடா சர்மா.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

 
Adah Sharma

நடிகை அடா சர்மா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

2008-ல் வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அடா சர்மா. தொடர்ந்து ஹார்ட் அட்டாக் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்தும் பரபரப்புக்கு உள்ளானார்.

Adah Sharma

இந்த நிலையில் அரிய வியாதியால் அவதிப்படுவதாக அடா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு ‘எண்டோ மெட்ரியோசீஸ்’ என்ற அரிய வகை வியாதி ஏற்பட்டு உள்ளது. இதனால் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். ‘கேரளா ஸ்டோரி’ படத்தில் ஒல்லியாக இருந்தேன்.

அதன்பிறகு இன்னொரு படத்துக்காக உடல் எடையை கூட்ட தினமும் அதிகம் சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு ஒரு டஜன் வாழைப்பழங்கள் சாப்பிட்டேன். தூங்குவதற்கு முன்பு லட்டு சாப்பிட்டேன். இதனால் எனது உடல் தோற்றம் மாறியது. அதோடு அரிய வியாதியும் வந்தது. இதன் காரணமாக இடுப்பு வலி ஏற்பட்டு நரக வேதனையை அனுபவித்தேன்” என்றார்.

Samantha - Fahad Fazil

ஏற்கனவே நடிகை சமந்தா, நடிகர் பகத் பாசில் ஆகியோர் அரிய வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்த நிலையில், நடிகை அடா சர்மாவும் அதுமாதிரியான நோயில் சிக்கி இருப்பதாக பகிர்ந்துள்ள தகவல் பரபரப்பாகி உள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சர்மா ரசிகர்கள் ஆறுதலளிக்கும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

From around the web