நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம்.. தீயாய் பரவும் தகவல்!

 
Vishal

நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டைக்கோழி-2 என தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த விஷால், தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். 45 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகிறது.

Vishal

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி விஷாலுக்கும், ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே திடீரென நிச்சயார்த்தம் ஏற்பட்டு கோலிவுட்டை பரபரப்புக்கு உள்ளாக்கியது. இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாமல் இடையிலேயே உறவு முடிந்தது. இதன்பின்னர் நாடோடிகள் பட நடிகை அபிநயாவுடன் விஷால் டேட்டிங்கில் இருப்பதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் பிரபல நடிகை லட்சுமி மேனனும், விஷாலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Vishal

கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடம் முடிந்தால் தான் திருமணம் என சொல்லி வந்த விஷால் அதன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவரது திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

From around the web