ஷூட்டிங் கேப்ல ஸ்கேட்டிங் பயிற்சி செய்த நடிகர் விஜய்.. வைரல் வீடியோ

 
Vijay

ஷூட்டிங் கேப்ல நடிகர் விஜய் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Vijay

இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கிற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக துபாய் வழியாக மாஸ்கோ சென்ற விஜய்யின் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. மாஸ்கோவில் தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தமிழ்நாட்டில் நடக்கவுள்ள சூழலில் அந்த தேர்தலில் விஜய் தனது வாக்கினை பதிவு செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

A post shared by Aishwarya (@aishwaryakalpathi)

முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் துவங்கிய நிலையில் படத்தின் சூட்டிங் நடக்கும் லொகேஷன்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்திருந்தார். தொடர்ந்து இன்றைய தினம் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் மாஸ்கோ நகர வீதிகளில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும்படியான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் சிறு பிள்ளையைப் போல நடிகர் விஜய் மாஸ்கோவில் சூட்டிங் நடைபெறும் இடத்தில் ஸ்கேட்டிங் பழகியதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதை பகிர்ந்து வருகின்றனர்.

From around the web