அரசியல் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய்.. வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!

 
Vijay - Rajini

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டுள்ளார். இவர், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

Vijay

இந்த நிலையில், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதை அவரே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிக்கையாக பதிவிட்டிருந்தார். விஜய் அரசியலுக்கு வந்ததும் அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மையம்  கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு தற்போது நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். வேட்டையன் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல விமான நிலையம் வந்த அவரிடம், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவரது நலம் குறித்த கேள்விக்கு, தான் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விஜய் கட்சி துவங்கியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  “நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” எனவும் தெரிவித்தார்.

From around the web